News Aggregator

Your daily dose of curated news from the world of Technology, Science, and Business

Trending Technology Science Business Health Entertainment Sports Politics Education Environment Hindi हिंदी Bengali বাংলা Tamil தமிழ்

Loading articles...

சிஎஸ்கே அணியில் தோனியின் பங்களிப்பு என்னவாக இருக்கும்? ஓய்வு எப்போது என்பதையும் தாண்டி எழும் கேள்விகள்

ஐபிஎல் தொடரில் 19-வது ஆண்டாக விளையாடப்போகும் தோனிக்கு தற்போது 45 வயது ஆகிறது. சர்வதேச போட்டிகளில் கடைசியாக ஆறரை ஆண்டுகளுக்கு முன் விளையாடியிருந்தாலும், தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டுவந்தாலும், ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக விளையாடிக்கொண்டிருக்கிறார்.

இரான் போரால் மீண்டும் பேசப்படும் 'இஸ்லாமிய நேட்டோ' - பாகிஸ்தான் எவ்வாறு பங்களிக்க முடியும்?

அமெரிக்கப் பாதுகாப்பின் மீதான நம்பிக்கை குறைந்து வரும் நிலையில், செளதி அரேபியா தலைமையில் வளைகுடா நாடுகள் துருக்கி மற்றும் பாகிஸ்தானின் உதவியுடன் 'இஸ்லாமிய நேட்டோவை' உருவாக்க வேண்டும் என்ற விவாதம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது. அந்த கனவு ஒருவேளை நனவானால், அதில் பாகிஸ்தான் எவ்வாறு பங்களிக்க முடியும்?

ஜிபிஎஸ் போன்ற இந்தியாவின் சொந்த வழிகாட்டும் செயற்கைக்கோள் திட்டம் செயலிழந்தது ஏன்?

ஐஆர்என்எஸ்எஸ் - 1எஃப் செயற்கைக்கோளில் இருந்த அணுக் கடிகாரம் கடந்த மார்ச் 13-ஆம் தேதி செயலிழந்ததுடன் இந்தியாவின் சொந்த 'ஜிபிஎஸ்' எனப் பெயர் பெற்ற நாவிக் (NavIC) அமைப்பின் செயல்பாடு முடங்கியது. முன்னர் இந்த அமைப்பு இந்திய பிராந்திய வழிகாட்டு செயற்கைக்கோள் அமைப்பு - ஐஆர்என்எஸ்எஸ் (Indian Regional Navigation Satellite System - IRNSS) என்று அழைக்கப்பட்டது. இந்தச் செயற்கைக்கோள் செயல் முடக்கத்துடன் இந்தியாவின் தன்னாட்சி வழிகாட்டும் திறன் முடிவுக்கு வந்துள்ளது.

இரான் மின் நிலையங்கள் மீதான தாக்குதலை 5 நாட்கள் நிறுத்துவதாக டிரம்ப் அறிவிப்பு - இரான் கூறுவது என்ன?

இரானின் மின்னுற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளதாக டிரம்ப் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

'அனைவரும் குற்றவாளிகள்' - சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கின் தீர்ப்பு கூறுவது என்ன?

சாத்தான்குளம் "பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மரணம் கொலை" என தீர்மானிக்கப்படுவதாக கூறிய மதுரை மாவட்ட அமர்வு நீதிபதி, தண்டனை விவரங்கள் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு - யாருக்கு எத்தனை தொகுதிகள்?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு இன்று முடிவு செய்யப்பட்டது.

கேரளத்தில் உள்ள ஒரே ஒரு தமிழ் எம்.எல்.ஏ.வின் தொகுதியில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு

கேரளத்தில் உள்ள 140 தொகுதிகளில் தமிழர் ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பது தேவிகுளம் (மூணாறு) தொகுதியில் மட்டுமே. அங்கு வாழும் லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களுக்கு, வாக்காளர் பட்டியலில் கேரளாவாசி என்றும், ரேஷன் கார்டுகளில் 'கேரளாவில் வசிக்காதவர்' என்றும் குறியிடப்படுவதால் நிலம் உள்ளிட்ட பல உரிமைகள் மறுக்கப்படுவதாகக் கூறுகின்றனர் அங்குள்ள தமிழர்கள்.

லண்டன் வரை இரான் ஏவுகணைகள் தாக்குமா? டியாகோ கார்சியா 'தாக்குதல்' எழுப்பும் கேள்விகள்

இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் உள்ள பிரிட்டன் -அமெரிக்கக் கூட்டு ராணுவத் தளத்தை நோக்கி இரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியிருக்கிறது. இதையடுத்து, லண்டனை அடையும் திறன் கொண்ட நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகள் இரானிடம் இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.

நீங்கள் படித்து முடித்ததும் முதல் வேலை கிடைக்க என்ன செய்யலாம்? 5 யோசனைகள்

வேலை கிடைப்பதற்கு இளைஞர்கள் சில குறிப்பிட்ட விஷயங்களை செய்ய வேண்டும் என வேலைவாய்ப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவை கைவிட்டு ரஷ்யா அல்லது சீனாவுடன் வளைகுடா நாடுகள் கைகோர்க்குமா?

பிராந்திய நெருக்கடி அதிகரித்து வருவதால், வளைகுடா நாடுகள் அமெரிக்காவுடனான தங்கள் பாதுகாப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவை கைவிட்டு ரஷ்யா அல்லது சீனாவுடன் வளைகுடா நாடுகள் கைகோர்க்குமா?

இலங்கையில் 'கியூஆர்' முறையில் பெட்ரோல், டீசல் விநியோகம் - எந்த வண்டிக்கு எவ்வளவு கிடைக்கும்?

'எரிபொருள் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கில்' முந்தைய அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கியூஆர் (QR) முறையை மார்ச் 15 முதல் மீண்டும் நடைமுறைப்படுத்த இலங்கை எரிசக்தி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வருசநாடு அருகே புலிகள் வாழும் காப்புக்காட்டில் 5 பேருக்காக செயல்படும் வாக்குச்சாவடி

தேனி மாவட்டம் வருசநாடு மலைப் பகுதியில் ஐந்து வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறியதன் மூலம் ஊடகங்களில் இப்பகுதி கவனம் பெற்றது.

Loading...
Loading...